ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

by Admin / 13-03-2022 01:30:27pm
ஆற்றின் கரையோரம் கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்

மயிலாடுதுறையில் அய்யாவையனாறு ஆற்றின் கரையோரம் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
சீர்காழியை அடுத்த வைத்தீஸ்வரன் கோவில் அருகே அய்யாவையனாறு ஆறு அமைந்துள்ளது. 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பிரதான பாசன ஆறாக விளங்குகிறது.

இந்த நிலையில், ஆற்றின் மேற்குப் பகுதி கரையோரத்தில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும், அந்த கழிவுகள் ஆற்றில் கலக்கும் அபாயம் இருப்பதாக அச்சம் தெரிவிக்கும் மக்கள் அவற்றை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


 
 

 

Tags :

Share via

More stories