பொங்கல் விளையாட்டு போட்டிகள்
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தய போட்டி நடைபெற்றது சிறிய , பெரிய மற்றும் பூஞ்சிட்டு என்று மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை விருதுநகர் ராமநாதபுரம் நெல்லை போன்ற மாவட்டங்களை சேர்ந்த 60 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன 10 கிலோமீட்டர் தூரம் நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தை சாலைகளின் இருபுறமும் இருந்து ஏராளமான கிராம மக்கள் கண்டு ரசித்தனர் இதில் பெரிய மாட்டு வண்டி போட்டியில் அவனியாபுரம் மோகன் என்பவரது மாட்டு வண்டியும் சின்ன மாட்டு வண்டி போட்டியில் வள்ளியூர் ஆனந்த் என்பவர் மாட்டு வண்டியும்பூஞ்சிட்டு மாட்டு வண்டியில் ஜக்கம்மாள்புரம் ஆனந்த் என்பவரது மாட்டு வண்டியும் முதல் இடத்தை பிடித்தது.
தென்காசி மாவட்டம் சிவகிரிதாலுகாவிலுள்ள வாசுதேவநல்லூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பசு ஓட்டம் 2 வது நாள் நிகழ்ச்கிநடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ப்பு.
திருச்சி மாவட்டம். மணப்பாறையை அடுத்த ஆவாரங்காடு பகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியை திருவரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.திருச்சி, புதுக்கோட்டை , திண்டுக்கல், சிவகங்கை உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 700 காளைகள், மற்றும் 350 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு.
Tags :