ஒரு தேர்தலின் போதே பல கட்சிகள் காணாமல் போய்விட்டன - திமுக தலைவர் மு. க .ஸ்டாலின்

by Admin / 17-06-2026 10:58:53am
ஒரு தேர்தலின் போதே பல கட்சிகள் காணாமல் போய்விட்டன - திமுக தலைவர் மு. க .ஸ்டாலின்

இன்று முன்னாள் திமுக பொருளாளரும் அமைச்சருமான ஆற்காடு வீராசாமி குடும்ப திருமண விழா வானகரத்தில் நடந்தது. விழாவில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க .ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களுக்கு திருநாள் எடுத்துக் கொடுத்து வாழ்த்து வழங்கினார். அப்பொழுது அவர் பேசும் பொழுது, திமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணியை செய்வதாகவும் இன்றைக்கு சோசியல் மீடியா மூலமாக ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஒரு நாள் சோசியல் மீடியா இல்லாமல் போகும். கோட் போட்டு வருகிறார். சாப்பாடு எடுத்து வந்து சாப்பிடுகிறார். பட்டு வெட்டி சட்டையை அணிகிறார். இன்று வெள்ளை சட்டை அணிந்து உள்ளார். என்றெல்லாம் ரிலீஸ் வருகிறதே தவிர நாட்டில் நடக்கும் அவலங்களை எல்லாம் ஆட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. அவற்றை பார்த்து ஆட்சியை சிறப்பாக நடத்த முயற்சிக்க வேண்டும் என்று அறிவுரை. ஒரு தேர்தலின் போதே பல கட்சிகள் காணாமல் போய்விட்டன. ஆனால், 75 ஆண்டு காலமாக திமுக வலிமையான ஒரு கட்சியாக இருந்து வருகிறது. திமுகவின் முதல் தொண்டனாக தலைவனாக இருந்து கட்சிப்பணி ஆட்சி வருவதற்கு ஆற்காட்டார் போன்றவர்களின் வழிகாட்டுதல் காரணம் என்றார். இந்நிகழ்வில், முன்னாள் முதலமைச்சர் துணைவியார். துர்கா ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவருடன் கட்சி முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via
Logo