சசிகலா இதை செய்தால் அதிமுகவிற்கு நன்மை - கேபி முனுசாமி
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி முனுசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை, ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தார் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கு பலர் உதவியாளராக இருந்து உள்ளனர். அவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும்போது தானோ, தனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம் என
எழுதிக்கொடுத்துவிட்டுத்தான் ஜெயலலிதாவுடன் இணைந்தார். அந்த வாக்கை சசிகலா நிறைவேற்றவேண்டும்.
சசிகலா இனி அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும். அதிமுகவுக்கும் நன்மை ஏற்படும். எம்ஜிஆர் மறைந்த பிறகு ஜானகி அம்மா, ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கை பார்த்து கட்சியை அவரிடம் ஒப்படைத்தார் என தெரிவித்துள்ளார்.
Tags :



















