நேபாள எல்லை விவகாரம் காரணமாக எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது

by Admin / 17-01-2022 04:30:22pm
 நேபாள எல்லை விவகாரம் காரணமாக எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது

இந்தியா- நேபாள எல்லையில் லிபுலேக், லிம்பியதுரா மற்றும் கலாபானி பகுதிகள் அமைந்துள்ளன. இந்த 3 இடங்களையும் நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. 

இதனால் இவை சர்ச்சைக்குரிய பகுதிகளாக உள்ளன.

இந்த நிலையில் லிபுலேக் பகுதியில் சாலை அமைப்பதற்காக இந்தியா சார்பில் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது.  

சாலை அமைக்கும் பணிகளை இந்தியா நிறுத்தவேண்டும் என்று நேபாளம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நேபாள அரசின் செய்தி தொடர்பாளர் நியானேந்திர பகதூர் கார்கி கூறுகையில், மகாகாளி நதிக்கு கிழக்கே உள்ள லிபுலேக் லிம்பியதுரா மற்றும் கலாபானி ஆகியவை நேபாளத்தின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். 

எனவே சாலை கட்டுமானப் பணிகளை இந்தியா நிறுத்தவேண்டும்’ என்றார்.
இந்த விவகாரம் காரணமாக இந்தியா- நேபாள எல்லைப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

 

Tags :

Share via