இது வரை 98,67,69,411 பேருக்கு தடுப்பூசி

by Editor / 19-10-2021 10:26:29am
இது வரை 98,67,69,411 பேருக்கு தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 13,058 புதிய கொரோனோ வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. அதேபோல மொத்தம் 164 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 19,470 பேர் கொரோனோ பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டில் மொத்தம் 3,40,94,373 பேர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டு 3,34,58,801 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் 4,52,454 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை நாட்டில் 98,67,69,411 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 87,41,160 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் மூன்றாம் அலை வராமல் தடுக்க மக்கள் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு வழிமுறைகளான.. சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், முக கவசம் அணிதல், கைகளைக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற அனைத்தும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

Tags :

Share via
Logo