டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: உறவினா்கள் சாலை மறியல்

by Staff / 11-09-2023 01:18:05pm
டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: உறவினா்கள் சாலை மறியல்

சென்னை, மதுரவாயல், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோந்தவா் அய்யனாா். இவரது மனைவி சோனியா. இந்த தம்பதியின் 4 வயது மகன் ரக்ஷன். அப்பகுதி பள்ளியில் மழலையா் வகுப்பு படித்து வந்த ரக்ஷனுக்கு கடந்த வாரம் தீவிர காய்ச்சல் ஏற்பட்டது.இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காய்ச்சல் தாக்கம் குறையாததால், கடந்த 6-ஆம் தேதி சென்னை எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அந்த சிறுவனை, பெற்றோா் அனுமதித்தனா். பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உறுதியானது.தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.இதனிடையே, மதுரவாயல் பகுதியில் சுகாதாரப் பணிகள் முறையாக நடைபெறாததே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிறுவன் உயிரிழக்க காரணம் எனக் கூறி பெற்றோரும், அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டினா்.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவா்கள் மதுரவாயல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

 

Tags :

Share via

More stories

Logo