பல ஆயிரம் கோடி வருவாய் முடங்கியது 3,400 விமான சேவை ரத்து

by Admin / 25-12-2021 12:50:54pm
பல ஆயிரம் கோடி வருவாய் முடங்கியது 3,400 விமான சேவை ரத்து


உலகம் முழுவதும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ளது.

நெதர்லாந்து நாட்டில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக பல நாடுகள் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
 
ஒமைக்ரான் பரவல் தீவிரமாக இருப்பதால் பல்வேறு நாடுகளில் விமான சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. உலகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 3,460 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதில் பெரும்பாலானவை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ஆகும். கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி நேற்றும், இன்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விமான டிக்கெட் எடுத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அறிவிக்கப்பட்டிருந்த 1,259 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆஸ்திரேலியாவில் சிட்னி, மெல்போர்ன் உள்பட பல நகரங்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டன. விமான நிலைய ஊழியர்கள் பலர் வேலைக்கு வராததாலும், சிலர் கொரோனா பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாலும் விமான சேவை நிறுத்தப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிறிஸ்துமஸ் விடுமுறையை மகிழ்ச்சியுடன் கொண்டாட பலர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு முன்பதிவு செய்திருந்தனர். திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். சில விமான நிலையங்களில் விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

விமான சேவை ரத்துமுன்னறிவிப்பு எதுவும் செய்யப்படாததால் பல பயணிகள் முன்னதாகவே விமான நிலையத்துக்கு வந்து காத்திருந்து திரும்பி சென்றனர்.

இந்தோனேஷியா நாட்டில் சிறந்த சுற்றுலா தலமாக பாலித்தீவு விளங்குகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட பல நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருவதுண்டு. ஆனால் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலா பயணிகள் பாலித் தீவுக்கு வரமுடியாமல் தவித்தனர்.

இதனால் கிறிஸ்துமஸ் நாளான இன்று பாலித்தீவு சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


 

 

Tags :

Share via