செயல்தலைவர் பதவி-வீறுகொண்டு எழும் தேமுதிக.

by Editor / 25-12-2021 12:58:22pm
 செயல்தலைவர் பதவி-வீறுகொண்டு எழும்  தேமுதிக.


“அன்னை தமிழ்மொழி காப்போம் அனைத்து மொழியையும் கற்போம்” தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கொள்கை பிரகடனம்.

அரசியலில் தூய்மை, நாணயம், மனித நேயம் ஆகியவற்றை கடைப்பிடித்து வறுமைக் கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்கிற நிலையை உருவாக்கிட பாடுபடுவதே எங்களின் லட்சியம்.

தமிழகத்தின் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தடுத்து நிறுத்துகின்ற லஞ்ச லாவண்யத்தையும், ஊழலையும் அரசியலில் புரையோடிவிட்ட பித்தலாட்டம், அயோக்கியத்தனம், சுயநலம் ஆகியவற்றையும் முதலில் தடுத்து நிறுத்தியும், எதிர்காலத்தில் அவற்றை அறவே ஒழிப்பது.

தீவிரவாதத்தை தூண்டுபவர்களையும், தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்களையும், ஒட்டு மொத்த தீவிரவாதத்தையும் நாட்டில் இருந்து அடியோடு ஒழித்து எம்மதமும் சம்மதம் எனும் நிலையை உருவாக்குவது.

அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி போன்ற மாநிலங்களுடன் உள்ள நதி நீர் பிரச்சினைகளை சுமூகத் தீர்வு கண்டு நட்புறவை வளர்த்து அதன் மூலம் அந்தந்த மாநிலங்களில் வீணாகும் தண்ணீரை தமிழகத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் நதிகளை இணைப்பதற்கு அடித்தளமிடுவது.

தமிழகத்தில் கல்வியையும், அதன் தரத்தையும் உயர்த்தும் நோக்கில் பண்டைய கால வரலாறும், பண்பாடும் மாறாமல் அதே நேரத்தில் நவீன காலத்திற்கும், நடைமுறைக்கும் ஏற்ப நடைமுறை கல்வியையும், தொழிற்கல்விக்கு முக்கியதுவம் அளித்து தரமான கல்வியை தமிழகத்திற்கு அளித்து மாணவர்கள், மாணவிகளின் எதிர்காலத்தை ஒளிமயமான எதிர்காலமாக மாற்றுவது.

இந்தியாவிலேயே தமிழகத்தை வேலைவாய்ப்புள்ள முதல் மாநிலமாக மாற்றுவது.
விவசாயிகளின் நலன் காத்திட விவசாய விளைபொருட்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் செய்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்துவது.

நெசவுத் தொழிலை நவீன மயமாக்கி நசிந்து வரும் நெசவுத் தொழிலையும், நெசவாளர்களின் நலன் காத்திட புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு நெசவுத் தொழிலின் வளர்ச்சிக்கு பாடுபடுவது.

ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் மதிப்பும், மரியாதையும் கொடுப்பதற்கு பாடுபடுவோம். அன்பு, அறம், ஆற்றல், என்பதை எங்கள் லட்சியக் கொள்கை முழக்கமாக எடுத்துக் கொண்டு தமிழகத்தை ஒளிமயமானதாக்குவோம்.என்ற முழக்கங்களோடு சங்கத் தமிழ்வளர்த்த மதுரைமண்ணிலிருந்து விருட்சமாக வளரவும்,முடிவு செய்யப்பட்டு தேமுதிக என்ற கட்சி உதயமானது,இந்த கட்சியை விஜயகாந்த் துவக்கும் பொது ஏராளமானவர்கள் விமர்சனத்தை அல்லி விதைத்தனர்..ஏராளமான நடிகர்கள் கட்சித்துவக்கி அதனை பாதியிலேயே மூடுவிழா கண்டதையும் பேசினார்கள்.ஆனால்  அதையெல்லாம் தாண்டி 
தமிழகத்தில்  2005 ஆம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜயகாந்த், 2011 ஆம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும்,யாரும் எதிர்பார்க்காத அரசியல் வரலாற்றில் முக்கியமான வலுவான  எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். பின்னர் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த கூட்டணியிலிருந்து வெளியேறினார்.

2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியில் இருந்து வெற்றி பெற்று தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு மக்கள் நல கூட்டணியின் முதல்-அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட இவர் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார்.அதன் பின்னர் நடந்த பாராளுமன்றத்தேர்தலிலும்,சட்டமன்றத்தேர்தலிலும் தேமுதிக எந்த இடத்தையும் கைப்பற்றவில்லை.


இதைத்தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்த விஜயகாந்த் பெரும்பாலும் கட்சி விவகாரங்களில் தலையிடாமல் இருந்துவருகிறார். கூட்டணி. தொகுதிப் பங்கீடு .வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து அவரது மனைவியும், கட்சியின் பொருளாளருமான  பிரேமலதா விஜயகாந்த் கவனித்து வருகிறார். 

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற  தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய கட்சியின் நிர்வாகிகள் பலரும்  கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் அதிரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.இதன் தொடர்ச்சியாக தேமுதிகவின் தலைவராக உள்ள விஜயகாந்திற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் முன்பு வேகமாக அரசியல் பணிகளில் ஈடுப்பட உடல் நிலை ஒத்துழைக்கவில்லை. இதன்காரணமாக  கட்சியின் பொருளாளராக உள்ள பிரேமலதாவை கட்சியின் செயல் தலைவராக நியமிக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். மேலும் பொதுச் செயலாளர் பதவியை உருவாக்கி பிரேமலதாவை நியமிக்க வேண்டும் என்றும் சில மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தினர்.இந்த கட்சிக்கென்று தனியாக இருந்த வாக்குவங்கிகள் கொஞ்சம்..கொஞ்சமாக குறைந்துவருகிறது.. அதனை மீட்டெடுக்கும் பணியிலும் கட்சி இறங்க வேண்டு மெனவும் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுதொடர்பாக இன்றுசெய்தியாளர்களை சந்த்தித்த  சந்திப்பில்  பிரேமலதா விஜயகாந்த், நடைப்பெற உள்ள “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும்என்றும்,. கட்சியில் புதியதாக செயல்தலைவர் பதவியை உருவாக்க வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதனால் புதியதாக செயல்தலைவர் பதவி ஏற்படுத்துவது குறித்து பொதுக் குழுவில் விஜயகாந்த் அறிவிப்பார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிப்பதாக பரவி வரும் தகவல் தவறானது. அவர் சினிமாவில் நடிக்கவில்லை. அரசியல் பணிகளை கவனித்துக் கொண்டு ஓய்வில் இருக்கிறார்” என்று அவர் தெரிவித்தார்.விரைவில் தேமுதிகவில் செயல்தலைவர் என்ற புதிய பதவியில்  பிரேமலதா விஜயகாந்த், பொறுப்பேற்று கட்சியை வலுப்படுத்துவார்.
 

 

Tags :

Share via