மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பினால் இழந்த கல்லூரி சான்றிதழ்களைப் பெற இணையதள உருவாக்கம்.
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பினால் கல்லூரி சான்றிதழ்களை இழந்த மாணவ மாணவியர்களுக்கு கட்டணம் இன்றி அவற்றின் நகல்களைப் பெற இணையதள உருவாக்கம்.
தமிழ்நாட்டில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மாடிப்பொலிவு ஏற்பட்டு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன
.தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க மழை வெள்ள பாதிப்பினால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ் இழந்த மாணவ மாணவிகள் தங்கள் சான்றிதழ்களின் நகல்களை கட்டணம் என்று பெறுவதற்கு ஏதுவாக mycertificates.in. [-மை சர்டிபிகேட் டாட் இன்] என்ற இணையதளம் உயர்கல்வி துறையால் உருவாக்கப்பட்டுள்ளது மாணவ மாணவிகள் தங்களின் இழந்த சான்றிதழ் பற்றிய விவரங்களை மேற்கண்ட இணையதள வாயிலாக இன்றிலிருந்து பதிவு செய்யலாம்
. மாணவ மாணவிகள் மேற்கண்ட இணையதளம் வாயிலாக சான்றிதழ்களின் விவரங்களை பதிவு செய்த பின் அவர்களது மின்னஞ்சலுக்கு ஒப்புகை அக்னாலேஜ்மென்ட் அனுப்பப்படும்.. அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்பட்டு மாணவர்களுக்கு சென்னையில் வழங்கப்படும்.
மேலும் இணையதளத்தில் பதிவு செய்வது குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் செயல்படும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை 1800–425–0110- [ ஒன்று எட்டு பூஜ்ஜியம் பூஜ்ஜியம் நாலு ரெண்டு ஐந்து பூஜ்ஜியம் ஒன்று ஒன்று பூஜ்ஜியம் ] என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்..
Tags :