விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றி, மான்கள் - உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை.
விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்திய காட்டுப்பன்றி,மான்கள் - சேதம் அடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என எம்.எல்.ஏ உறுதி ....
தூத்துக்குடி மாவட்டம், மேல நம்பியாபுரம் ராசாபட்டி , அயன் வடமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்களில் மானாவாரி பயிரான மக்காச்சோளம் பருத்தி வேர்க்கடலை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன..
பயிரிடப்பட்ட விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோளம் நிலக்கடலை உள்ளிட்ட பயிர்களை காட்டுபன்றி மற்றும் மான்கள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் பெறும் துயரத்திற்கு உள்ளாகினர்...
இதனை அறிந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன் மேல நம்பி புரம் அயன் வடமலாபுரம் ராசா பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு விளைநிலங்களில் சேதம் அடைந்த மக்காச்சோள பயிர்களை பார்வையிட்டார் ..இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ.வி மார்க்கண்டேயன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்திய காட்டு பன்றிகளால் பெருமளவு விவசாயிகள் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் என்ற முறையில் பார்க்கிறேன்..
அனைவரின் ஒத்துழைப்போடு வரும் காலங்களில் காட்டுப் பன்றியை ஒழிக்க பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது..
காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தை தடுக்கவும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு பெற்று தர நடவடிக்கையும் எடுக்கபடும் மேலும் வருவாய்த்துறையினர் வேளாண் துறையினர் புள்ளியல் துறையினர் வனத்துறையினர் மூலம் அறிக்கை தயார் செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்க உள்ளோம் எனவே இது குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். .
இப் பிரச்சனைகளால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் எனவே இது தொடர்பாக நமது எம்பி கனிமொழியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது குளிர்கால கூட்டத்திலேயே பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்..
Tags :