மத்திய சதுக்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை சென்ட்ரல் பகுதியில் ,சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் உலகத்தரம் வாய்ந்த பன்முக போக்குவரத்து ஒருங்கிணைப்புத்திட்டமான மத்திய சதுக்கத்திட்டத்தின் கீழ் 21.73 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,மெட்ரோ இரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர்/முதன்மைச்செயலாளர் பிரதீப் யாதவ் இ.ஆ.ப மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
Tags :



















