அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர்

by Staff / 08-01-2024 02:29:05pm
அமைச்சரை தோற்கடித்த காங்கிரஸ் வேட்பாளர்

ராஜஸ்தான் இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தானில் கரன்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமைச்சரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர் தோற்கடித்துள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சுரேந்தர் சிங்கை காங்கிரஸ் வேட்பாளர் ரூபிந்தர் சிங் 12,750 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக காங்கிரஸ் கட்சியினர் தங்களது அலுவலகத்தில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo