புஞ்சைபுளியம்பட்டியில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் சாலை மறியல் பாப்புலர் பிரண்ட் ஆப்

by Staff / 23-09-2022 12:38:24pm
புஞ்சைபுளியம்பட்டியில் எஸ். டி. பி. ஐ. கட்சியினர் சாலை மறியல் பாப்புலர் பிரண்ட் ஆப்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் ஓ. எம். எ. சலாம் கைது செய்யப்பட்டதை கண்டித்து புஞ்சைபுளியம்பட்டியில் சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பவானிசாகர் பிரிவு அருகே எஸ். டி. பி. ஐ. கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் கட்சியின் மாவட்ட செயலாளர் முசீர் தலைமையில் பலர் கலந்து கொண்டனர். சாலை மறியல் காரணமாக சத்தியமங்கலம்- கோவை தேசிய நெடுஞ்சாலை மற்றும் பவானிசாகர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் வரை கோஷங்கள் எழுப்பிய அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் புஞ்சைபுளியம்பட்டியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 

 

Tags :

Share via

More stories