தங்க அங்கி திருஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது.

மண்டல பூஜை அன்று ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி திருஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது. காலை 8.30 துவங்கிய இந்த ஊர்வலம் வரும் 25 ஆம் தேதி பிற்பகல் பம்பை சென்றடையும். அன்று மாலை சன்னிதானத்தில் ஐயப்பனுக்கு இந்த தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 1973 ஆம் ஆண்டு திருவராங்கூர் சித்திரை திருநாள் மகாராஜா 451 பவுன் எடை கொண்ட இந்த தங்க அங்கியை சபரிமலைக்கு வழங்கினார்.சபரிமலை ஐயப்பனுக்கு ஆண்டுதோறும் மண்டல பூஜை அன்று அணிவிக்கும் தங்க அங்கி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் 26 ஆம் தேதி காலை மண்டல பூஜை நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும். பின்னர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் மகர ஜோதிக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
Tags : தங்க அங்கி திருஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து சபரிமலை நோக்கி புறப்பட்டது.