வெளிநாடுகளில் இருந்து டெல்லி வந்த 4 பேருக்கு கொரோனா

வெளிநாடுகளில் இருந்து டெல்லிக்கு வந்த 6 பயணிகள் கொரோனாவுடன் ஏற்கனவே வந்த நிலையில் மேலும் 4 பயணிகளையும் சேர்த்து 10 பயணிகள் கொரோனா சந்தேக அறிகுறிகளுடன் டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு டெல்லி விமான நிலையத்தில் இன்று 2-வது நாளாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
டெல்லி விமான நிலையத்திற்கு ஏர்பிரான்ஸ் விமானம் மூலம் 243 பயணிகள் வந்தனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதுபோல லண்டனில் இருந்து வந்த 195 பயணிகளை பரிசோதித்ததில் ஒருவருக்கு கொரோனா தாக்கம் இருப்பது தெரிந்தது. இந்த 4 பயணிகளும் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Tags :