குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

by Editor / 08-10-2024 09:00:16am
குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது.

குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தென்காசி மாவட்டம்,  குற்றாலம் அருவிக்கு அருகே அமைந்துள்ள குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை விசு,ஐப்பசி விசு திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத விசு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

இந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்த நிலையில், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

 விழாவின் முக்கிய நிகழ்வுகளான பஞ்சமூர்த்தி புறப்பாடு 11 ஆம் தேதியும், அருள்மிகு விநாயகர், முருகன், திருக்குற்றாலநாத சுவாமி, குழல்வாய்மொழி அம்மன், என எழுந்தருளும் நான்கு தேர்கள் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்வு 12 ஆம் தேதியும், அருள்மிகு நடராசமூர்த்திக்கு தாண்டவதிபராதனை 14 ஆம் தேதியும், சித்திர சபை நடராசமூர்த்திக்கு பச்சை சாத்தி மற்றும் தாண்டபதி பரதனை 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.

மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஐப்பசி விசு திருவிழாவில் நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்- இந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 

Tags : குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி விசு திருவிழா கொடியேற்றம் மேளதாளங்கள் முழங்க சிறப்பாக நடைபெற்றது

Share via