காஷ்மீர் தாக்குதல்: “அவங்களுக்கு தண்டனை கொடுக்கணும்” - ரஜினி பேட்டி

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காஷ்மீரில் அமைதியான சூழல் நிலவுவது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை. அதை கெடுக்க வேண்டும் என்று செய்கிறார்கள். அதைச் செய்தவர்களுக்கும், அவர்கள் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும். இதே மாதிரி மீண்டும் செய்ய வேண்டும் என கனவிலும் அவர்கள் நினைக்கக் கூடாது" என்றார்
Tags :