பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது -  கனிமொழி எம்பி 

by Editor / 28-12-2024 12:33:00pm
பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது -  கனிமொழி எம்பி 

அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்றும் பெற்றோர்கள் அச்சப்படுவதாகம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் குற்றச்சாட்டியநிலையில் அவரது குற்றச்சாட்டுக்கு  தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுன்றக்குழுத்தலைவர் கனிமொழி கூறும்போது; 

பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது,இது போன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதுதான் எல்லோரின் விருப்பம். அண்ணா பல்கலைக்கழக  மாணவி விவகாரத்தில் முதல்வர் எந்த பாரபட்சமும் இன்றி குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி குற்றவாளி கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அவர் மீது ஒரு குற்றச்செயல் நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில்  FIR  ஐ மறைத்துள்ளனர். பாலியல் தொல்லை தந்ததோடு மட்டுமில்லாமல் சங்கிலியையும் அந்த குற்றவாளி பறித்துள்ளார். ஆனால் அதை சங்கிலி பறிப்பு வழக்காக மட்டும் பதிவு செய்துள்ளனர்.  குற்றவாளிக்கு அன்றே சரியான தண்டனை விதித்திருந்தால்.  ஒரு கண்காணிப்பாவது இருந்திருக்கும். அப்போது அவர்கள் கடமையை செய்ய தவறியதால் இது போன்ற ஒரு சம்பவம் நடக்க இன்று காரணமாகிவிட்டது

இந்தியாவிலேயே பெண்கள்  அதிகமாக படிக்க வரக்கூடிய தமிழகத்தில் எல்லோ பெற்றோர்களும் அச்சப்படுகிறார்கள் என்று ஒரு தவறான கருத்தை எடுத்துச் சொல்லும் போது பெண்களின் கல்வியும், எதிர்காலமும் பாதிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

 முதல்வரும், திமுகவும் பெண்களின் உரிமைக்காகவும் பெண்களின் கல்விக்காகவும், உரிமையை இன்னும் அதிக படுத்த வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து பணிகளை செய்து வருகிறது.பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது. அதனால் தான் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.என்று தெரிவித்தார்.

 

Tags : பெண்கள் மீது முதல்வருக்கும் ஆட்சிக்கும் மிகப்பெரிய அளவில் அக்கறை இருக்கிறது -  கனிமொழி எம்பி 

Share via