ஆயுதங்களுடன் இருவர் கைது.

by Staff / 19-05-2023 05:12:14pm
 ஆயுதங்களுடன் இருவர் கைது.

மதுரை கீரைத்துரை காவல் உதவி ஆய்வாளர் சந்தான போஸ் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பத்திர காளியம்மன் கோவி தெரு தண்டவாளம் அருகே சந்தேகப்படும் வகையில் பதுங்கியிருந்த 2 வாலிபர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் இருவரும் கொலை செய்யும் நோக்கத்தில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.மேலும் அவர்கள் கீரைத்துறை வேத பிள்ளை தெருவை சேர்ந்த முத்து ராமலிங்கம் மகன் ராஜ்குமார் என்ற ராசுக்குட்டி (24), புது மகாளிப்பட்டி ரோடு முத்து கருப்பன் மகன் தாமரை செல்வம் என்ற குட்டைச்செல்வம் (22) என்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

 

Tags :

Share via

More stories