பள்ளி சீருடைக்கு அளவு எடுத்த ஆண் டெய்லர்.. ஆசிரியை மீது வழக்கு

by Editor / 27-03-2025 01:31:43pm
பள்ளி சீருடைக்கு அளவு எடுத்த ஆண் டெய்லர்.. ஆசிரியை மீது வழக்கு

மதுரை மாவட்டத்தில் பள்ளி சீருடைக்கு ஆண் டெய்லரை வைத்து மாணவிகளுக்கு அளவீடு எடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி அளவு கொடுக்க மறுத்த நிலையிலும், ஆசிரியை கட்டாயப்படுத்தி அளவீடு எடுக்க வைத்துள்ளார்.  பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via