மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய செயலி
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் கவனித்துவரும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நவீனமயமாகிறது. அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பயன் சென்றடைவதை உறுதி படுத்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய செயலியில் கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்புகள், பயிற்சிகள், நேர்காணல்கள், சிகிச்சைகள், உபகரணங்களின் விற்பனையாளர்கள், உதவும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் சுமார் 8 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. செயலியை ஏறக்குறைய 50 ஆயிரம் நன்கொடையாளர்கள், 5 ஆயிரம் ஊழியர்கள் பயன்படுத்துவார்கள்.
இது அடுத்த ஆண்டு முதல் முழுமையான செயல்பாட்டிற்கு வரும். மாற்றுத்திறனாளிகள் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றவேண்டும் என்பதற்காக அவர்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து தடைகளும் நீங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 100 கோடி மதிப்பில் நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்காக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்த உள்ளது.
Tags :



















