வங்காநரி ஜல்லிக்கட்டு இருவர் மீது காவல்துறையினர் வழக்கு

by Editor / 18-01-2022 05:46:09pm
 வங்காநரி ஜல்லிக்கட்டு இருவர் மீது காவல்துறையினர் வழக்கு

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையத்தில் ஆண்டுத்தோறும் வங்காநரி ஜல்லிக்கட்டுநடப்பதுவழக்கம்.கடந்த 100 ஆண்டுகாலமாக பாரம்பரியமாக இந்த விளையாட்டு நடந்துவருவதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் இந்தாண்டு பொங்கல் திருவிழா முடிந்து காணும்  பொங்கல் திருநாளை முன்னிட்டு  16ஆம் தேதி ஞாயிறு ஊரடங்கு என்பதால், சின்னமநாயக்கன்பாளையம் கிராமமக்கள், நேற்று 17 ஆம் தேதி காலை அந்தப்பகுதியில் வனவிலங்குகளில் தடை செய்யப்பட்ட விலங்குகள் பட்டியலில் உள்ள வங்காநரியை  பிடித்து மேள வாத்தியம் முழங்க, கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்ற கிராமத்தினர் பின் அங்குள்ள கோவில் வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு காண்பித்து விட்டு, நரியை மீண்டும் பிடித்த இடத்திற்கே கொண்டு சென்று விட்டனர். இதன்பிறகு, எருதாட்டம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பொங்கல் பண்டிகையை கொண்டாடி நிறைவு செய்தனர்.இந்த நிலையில்  தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்திய இருவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.வனத்துறையினர் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

 வங்காநரி ஜல்லிக்கட்டு இருவர் மீது காவல்துறையினர் வழக்கு
 

Tags :

Share via