பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும்

by Staff / 20-05-2022 12:27:20pm
பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும்

பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதார் அட்டை வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. பாலியல் தொழிலாளர்களின் நலன் கருதி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை மேற்கொண்டது. அப்போது பேசிய நீதிபதிகள் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அரசியல் சாசன சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை ஏன் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். மாநில யூனியன் பிரதேச அரசுகள் உரிய அடையாள அட்டை இல்லாத பாலியல் தொழிலில் கண்டறிந்து அவர்களுக்கு அடையாள அட்டையுடன் ரேஷன் பொருள்கள் கிடைப்பது உறுதி செய்ய வேண்டும் என்றும் வாக்காளர் அட்டை அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

 

Tags :

Share via

More stories