தவெக ஆட்சியைத் தக்க வைக்க மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து தன்பக்கம் இழுப்பதாக அ.தி.மு.க கொறடா புகார் மனு

by Admin / 04-07-2026 07:31:32pm
தவெக ஆட்சியைத் தக்க வைக்க மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து தன்பக்கம் இழுப்பதாக அ.தி.மு.க கொறடா புகார் மனு

தவெக ஆட்சியைத் தக்க வைக்க மாற்றுக்கட்சி எம்.எல்.ஏ-க்களைப் பதவி விலகச் செய்து தன்பக்கம் இழுப்பதாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் அ.தி.மு.க கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி- மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை ஆகியோர் புகார் மனு அளித்துள்ளனர்.. எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை, மீண்டும் அதே தொகுதிகளின் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் தொிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து  கே. மரகதம் குமரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்திபாமா, இசக்கி சுப்பையா, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். அதிமுக எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவசரமாக ஏற்றுக் கொண்டது செல்லாது என அறிவிக்கக் கோரி, அதிமுக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் தவெக-விற்கு ஆதரவாகச் செயல்பட்ட முந்தைய நடத்தையின் அடிப்படையிலான தகுதிநீக்க நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் தப்ப முடியாது என்று சட்டப்பேரவைச் செயலகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo