வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

by Admin / 04-07-2026 06:36:11pm
வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

வட மேற்கு வங்கக்கடல் மற்றும் ஒடிசா மேற்கு வங்க கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதாகவும் இது மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இந்தக் காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக பெரும் அளவில் கனமழைக்கான வாய்ப்பு இல்லை என்றாலும் வளிமண்ட சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேடை மூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது. கடல் பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo