ஆதித்யா எல் 1 - திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து

by Staff / 02-09-2023 05:22:57pm
ஆதித்யா எல் 1 - திமுக எம்.பி கனிமொழி வாழ்த்து

சூரியனை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'ஆதித்யா எல்1' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. இந்நிலையில், திமுக எம்.பி கனிமொழி தனது ட்வீட்டர் பக்கத்தில், “சூரியன் குறித்த ஆய்வுகளுக்காக, விண்ணில் ஏவப்பட்டிருக்கும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநர், தென்காசியை சேர்ந்த நிகர் ஷாஜிக்கு வாழ்த்துகள் நம் நாட்டின் விண்வெளி துறைசார் பயணத்தில், பெரியதொரு மைல் கல்லாக இருக்கும் ஆய்வுத் திட்டத்தைத் திறம்பட வழிநடத்திவரும் அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via