வடமாநில இளைஞர் அடித்துக்கொலை.. ஒருவர் கைது

by Editor / 18-04-2025 04:20:11pm
வடமாநில இளைஞர் அடித்துக்கொலை.. ஒருவர் கைது

வீட்டுக்குள் புகுந்து முதியவரை தாக்கிய வடமாநில இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம் கொல்லம்பாளையத்தை சேர்ந்த முதியவர் சுப்பிரமணி மீது நேற்று (ஏப்.17) மேற்குவங்கத்தை சேர்ந்த இளைஞர் ராபி தாக்குதல் நடத்தினார். இளைஞரை சுப்பிரமணியனின் மகன் மணிகண்ட பூபதி உட்பட பொதுமக்கள் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பூபதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via