பல்லடம் மூவர் கொலை வழக்கில் முக்கிய திருப்பம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, அலமேலு அம்மாள் மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில், குறவர் சமூகத்தை சேர்ந்த நபரிடம் CBCID போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பல்வேறு திருட்டு வழக்குகளில் கோவை சிறையில் உள்ள குறவர் சமூகத்தை சேர்ந்த ராமச்சந்திரனுக்கு இக்கொலை வழக்கில் தொடர்புள்ளதா? என்ற கோணத்தில் விசாரிப்பதற்காக, அவரை பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :