தூத்துக்குடி தாய், மகள் கொலை வழக்கு : முக்கிய குற்றவாளியை சுட்டுப்பிடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மேல நம்பிபுரம் தாய், மகள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி முனீஸ்வரன். இவர் குளத்தூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் மற்றும் மூன்று போலீசாரை வெட்டி விட்டு தப்ப முயன்றபோது, மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாலாஜி எடைமேடை அருகே சுட்டுப் பிடித்தாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சுடப்பட்ட முனீஸ்வரன், காயம் பட்ட எஸ்.ஐ. முத்துராஜா மற்றும் போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :