இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. இன்ஸ்டாகிராமால் வந்த வினை

by Staff / 17-06-2024 03:30:41pm
இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. இன்ஸ்டாகிராமால் வந்த வினை

உ.பி., மாநிலம் மீரட்டில் வசிக்கும் இளம் பெண் ஒருவருக்கு இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் வங்கியில் வேலை செய்வதாகவும், அந்த பெண்ணுக்கும் வேலை வாங்கித்தருவதாகவும் கூறியுள்ளார். இதனை நம்பி அப்பெண் அந்த இளைஞரின் நண்பருடன் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டல் அறைக்கு சென்றுள்ளனர். அங்கு பெண்ணின் இன்ஸ்டாகிராம் நண்பர் இருந்துள்ளார். பின்னர் அப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து கொடுத்து இருவரும் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories