போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் மீண்டும் அஜித் கார் ஆக்ஸி டென்ட்..

போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார். இப்போட்டிக்கான பயிற்சியின் போது அஜித்குமாரின் கார் விபத்தில் சிக்கி உள்ளது. இரண்டாவது முறையாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அஜித்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். காயம் ஏதும் ஏற்படவில்லை. அவரை பத்திரமாக மீட்ட நிலையில், கார் மட்டும் சேதம் அடைந்துள்ளது. இந்த நிலையில், அஜித் குமார் விபத்து குறித்து அளித்த பேட்டியில் எங்களுக்கு மீண்டும் நல்ல நேரம் இருக்கிறது. சிறிய அளவிலான விபத்தில் சிக்கினோம். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் நடக்கவில்லை. மீண்டும் கார் ரேஸில் வெற்றி பெற்று பெருமையை நிலைநாட்டுவோம். விபத்து நடைபெற்ற நேரத்தில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த நன்பர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்றோம் என்று சொல்லி இருக்கிறார்.
Tags : போர்ச்சுக்கல் நாட்டில் நடைபெற்று வரும் கார் ரேஸில் மீண்டும் அஜித் கார் ஆக்ஸி டென்ட்..