"காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா அன்புமணி ராமதாஸ் கேள்வி
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர், "காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளின் குறுக்கே 10 கி.மீக்கு ஒரு தடுப்பணையை கட்ட வேண்டும் என்று பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதை செய்வதற்கு மாறாக 10 கி.மீக்கு ஒரு மணல் குவாரியை அமைத்து வருகிறது தமிழக அரசு. தமிழக அரசு எப்போது விழித்துக் கொள்ளப் போகிறது? எப்போது தடுப்பணைகளை கட்டப் போகிறது?" என காட்டமாக விமர்சித்துள்ளார்.
Tags :