கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து இரவு நேரங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் பொதுமக்கள் அவதி....

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக ஏரி குளங்கள் படிப்படியாக நிரம்பி வரும் நிலையில் திருவண்ணாமலை அடுத்த நொச்சிமலை கிராமத்தில் உள்ள ஏரி நிரம்பி உபரி நீர் கஜலட்சுமி நகர், தனலட்சுமி நகர், வீனஸ் நகர், சுப்புலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி முழங்கால் அளவிற்கு வெள்ள நீர் புரண்டு ஓடுவதால் பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வேங்கிக்கால், துர்கா நகர், ஓம் சக்தி நகர், ஐயப்பன் நகர், அம்பாள் நகர், கீழ்நாச்சிபட்டு, நொச்சிமலை, கஜலட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் வர முடியாமல் தவித்து வருகின்றனர். அதேபோன்று கீழ்நாத்தூர் ஏரியில் இருந்து மீன்கள் வெளியேறி எதிர் திசையில் வரும் வெல்ல நீரில் எதிர்நோக்கி செல்வதால் இளைஞர்கள் மீன்களை அடித்து பிடித்து உற்சாகமடைந்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் இருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் உள்ள நாவக்கரை அருகே நெடுஞ்சாலையில் நொச்சிமலை பகுதியில் இருந்து வெளியேறும் நீரில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஏரியில் இருந்து வெளியே வரும் 15 கிலோ எடையுள்ள மீன்களை அடித்து பிடித்து வருகின்றனர்.
வரலாறு காணாத அளவிற்கு கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் பெய்த பலத்த மழையின் காரணமாக கஜலட்சுமி நகர் பகுதியில் வெள்ள நீர் புரண்டு ஓடுவதால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Tags :