ரூ.1,20,000 மதிப்பிலான பொருட்கள் துணை மின் நிலையத்தில் திருட்டு.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை துணை மின் நிலைய வளாகத்தில் இளம் மின் பொறியாளர் அலுவலகம் உள்ளது.இந்த அலுவலக கதவு பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து 130 மீட்டர் தாமிரம், அலுமினிய கம்பிகள், எர்த்ராடு, ஸ்பேனர் உள்ளிட்ட மின் சாதனங்கள் என ரூ.1,20,000 மதிப்பிலான பொருட்கள் திருடி சென்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து வடமதுரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Tags : ரூ.1,20,000 மதிப்பிலான பொருட்கள் துணை மின் நிலையத்தில் திருட்டு.