விடுமுறை தினம் என்பதால் திரளான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை

by Staff / 23-04-2023 03:38:03pm
விடுமுறை தினம் என்பதால் திரளான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை

இன்று ஞாயிறு விடுமுறையால் திரளான சுற்றுலா  சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வந்தனர்.
ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரமாக கோடை வெயில் கொளுத்தியது .இந்த நிலையில் நேற்று மாலை சாரல் மழை பெய்தது. இதனால் குளிர் காற்று வீசியது.ஏற்காட்டில்சீதோஷ்ண நிலை குளுமையாக மாறியுள்ளதாலும்,இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதாலும் திரளான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்தனர்.இவர்கள் ஏற்காடு அண்ணா பூங்கா ரோஜா தோட்டம், ஏரி பூங்கா, ஐந்திணை பூங்கா, பக்கோடா பாயிண்ட் ,லேடிசீட், சேர்வராயன் குகை கோயில்,போன்ற இடங்களுக்கு சென்று சுற்றி பார்த்தனர். ஏற்காடு படகு இல்லத்திற்கு  ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு படகுகளில் சென்று மகிழ்ச்சி அடைந்தனர்.தற்போது ஏற்காட்டில் சீசன் தொடங்கி உள்ளதால்சுற்றுலா பயணிகள் வருகையால் ஏற்காட்டில் வியாபாரம் சூடு பிடித்தது.கூட்டம் அதிகம் வர தொடங்கி உள்ளதால்கார் மற்றும் வாடகை வாகன ஒட்டுனர்கள்தங்கும் விடுதிகள் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இன்று அதிகளவில் வந்ததால் மலை பாதையிலும் சுற்றுலாப்பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

 

Tags :

Share via

More stories