புனித வெள்ளி- இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுகிற தினம்

by Admin / 07-04-2023 01:29:01am
புனித வெள்ளி- இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுகிற தினம்

புனித வெள்ளி கிறிஸ்துவர் ஏசு அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் சிலுவையில் அவர் அறைந்து சாகடிக்கப்பட்ட நாளை நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வாகும். கிறிஸ்தவர்களின்  இறை வழிபாட்டில் இந்த இயேசு உயிர்த்தெழுந்த நாள் மிக முக்கியமானது .ஞாயிறுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை நிகழும் இந்த நிகழ்வு இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுகிற தினத்தை  முன்னிட்டு ஒவ்வொரு  கிறித்துவ தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகளில் நடத்த பெறும்.. இயேசு கிறிஸ்து கிபி 33ஆம் ஆண்டு ஏப்ரல் மூன்றாம் நாள் வெள்ளிக்கிழமை அன்று இறந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றிய ஆதாரங்களை விவிலியத்தில் தேடும் பொழுதும் ஏசானவர் மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டெடுப்பதற்காக பல்வேறு துயரங்களை அடைந்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டு எழுந்தவர் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த நற்செய்தியையே கிறிஸ்துவ மதத்தின் புனித நூலான பைபிளில்களில் மத்தேயு நற்செய்தி, மார்க்க நற்செய்தி, லூக்காளர் செய்தி, யோவான் நற்செய்திகளில் அங்கங்கே குறிப்பிட்டிருப்பதை நாம் அறிய முடியும்

 

Tags :

Share via

More stories