விநாயகர் சதுர்த்திக்காக 261 சிறப்பு ரயில்கள் இயக்கம்
நாடு முழுவதும் வரும் 10 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டப்பட உள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா பொது முடக்கம் காரணமாக கொண்டாட்டம் ஏதும் இன்றி மக்கள் வீடுகளை விட்டு கூட வெளியே வராமல் இருந்தனர். ஆனால், இந்த ஆண்டு சில கட்டுப்படுகளுடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பல்வேறு இடங்களில் வசிக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தி அன்று சொந்த ஊர் செல்வதற்கு வசதியாக 261 சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, மத்திய ரயில்வேயில் 201 சிறப்பு ரயில்களும், மேற்கு ரயில்வேயில் 42 சிறப்பு ரயில்களும், கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளது. மேலும், இந்த ரயில்கள் செப்டம்பர் 20 வரை இயக்கப்படும் என ரயில்வே தெரிவித்துள்ளது.
Tags :