எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர்

by Editor / 07-09-2021 08:28:00pm
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் கருணாநிதி பெயர்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன் சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தார்.

சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மற்றும் மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது. இதில், பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை எழும்பூர் பகுதியை, 900 ஆண்டுகளுக்கு முன் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருப்பது போல எழுமூர்(EZHUMOOR) என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்றார்.

இந்தியாவின் 8 மாநிலங்களில் உள்ளது போன்று, தமிழகத்திலும் மத்திய புலனாய்வுப் பிரிவான சிபிஐ, மாநில அரசை கலந்தாலோசிக்காமல் விசாரணை நடத்தக் கூடாது என்ற தீர்மானத்தை சட்டப் பேரவையில் கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் தொடங்கப்பட வேண்டும் எனவும், ஒன்றிய அரசின் ஜூடீசியல் சர்வீஸ் சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு எதிர்க்க வேண்டுமெனவும், இதன் மூலம் இந்திய அளவில் வேறு ஏதோ மாநிலங்களை சார்ந்தவர்கள் சார்பு நீதிமன்றங்களில் நீதிபதியாக வரக்கூடிய வாய்ப்பு உருவாகும் எனவும் கூறினார்.

 

Tags :

Share via

More stories