வாராந்திர சிறப்பு ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பு.
ரயில் எண். 06035/06036 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் சேவை கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி நீட்டிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளத்தில் இருந்து சனிக்கிழமைகளில் 13.10 மணிக்கு புறப்பட் டு மறுநாள் 05.40 மணிக்கு தென்காசி,கும்பகோணம்,தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்று சேரும் ரயில் எண். 06035 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில், 04, 11, 18 & 25 (4 சேவைகள்) மார்ச், 2023 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 18.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் 11.40 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும் ரயில் எண். 06036 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண சிறப்பு ரயில் 05, 12 ,19 & 26 மார்ச், 2023 ஆகிய தேதிகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது (4 சேவைகள்)
ரயில்களின் நேரம், நிறுத்தங்கள் மற்றும் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை மேற்கண்ட சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்றுவருகிறது.
Tags :