மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம்.

by Editor / 25-02-2023 09:43:26am
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் யானைகள் அட்டகாசத்தால் விவசாயிகள் அச்சம்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அச்சன்குளம் பகுதியில் உள்ள தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் 60-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்துள்ளன.மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள வயலில் விவசாயிகள் நெற்பயிர் பயிரிட்டு அது அறுவடையாகும் நிலையில் உள்ளது. மேலும் தென்னை, வாழை போன்ற பயிர்களும் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு அடிக்கடி காட்டு யானைகள் வந்து பயிர்களை அழித்து சேதப்படுத்தி வருகின்றன. அவ்வாறு வரும் யானைகள் இரவில் வந்துவிட்டு அதிகாலையில் சென்று விடுகின்றன. இது ஒரு புறம் இருக்க கடந்த 2 நாட்களாக யானைகள்  விளைநிலங்களில் புகுந்து தென்னை, வாழை நெற்பயிர்கள் போன்றவற்றை மிதித்து அழித்து வருகிறது. இரவில் வந்துவிட்டு அதிகாலையில் காட்டுக்குள் சென்று விடுகிறது.தென்னை மரங்களை வேருடன் பிடுங்கி வீசி உள்ளது.யானைகளின் இந்த அட்டகாசத்தால் தங்களது விளை நிலங்களுக்குள் விவசாயிகள் செல்ல அஞ்சுகிறார்கள். இது குறித்து வனத்துறைக்கு விவசாயிகள் புகார் கொடுத்துள்ளனர். தங்களது உயிர் மற்றும் பயிர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via