ச.மக.விலிருந்து விலகிய மாவட்டசெயலாளர். 

by Editor / 12-03-2024 11:50:21pm
ச.மக.விலிருந்து விலகிய மாவட்டசெயலாளர். 

நடிகர் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, தொடர்ந்து பல தேர்தல்களில் சறுக்கலை சந்தித்து வந்தது. இந்நிலையில், இன்று எதிர்பாராதவிதமாக சமத்துவ மக்கள் கட்சியை, பாஜகவுடன் சரத்குமார் இணைத்தார். இளைஞர்களின் நலனுக்காகவும், நன்மைக்காகவும் கட்சியை பாஜகவுடன் இணைத்ததாக சரத்குமார் தெரிவித்தார். இது அவரின் கட்சி நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை இது கட்சியின் மற்றும் சில மாவட்ட செயலாளர்கள் மத்தியிலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த முகமது கனி, அக்கட்சியில் இருந்து விலகி தமிழக வாழ்வுரிமை கட்சியில் உடனடியாக இணைந்துள்ளார்.
 

 

Tags : ச.மக.விலிருந்து விலகிய மாவட்டசெயலாளர். 

Share via

More stories