தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படிஉயர்வு-முதலமைச்சா்.மு.க. ஸ்டாலின்

by Editor / 12-03-2024 11:47:33pm
தமிழக அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படிஉயர்வு-முதலமைச்சா்.மு.க. ஸ்டாலின்

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவிகிதம் உயர்த்தி வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவீதமாக உயரும்.

.அவ்வகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு 2024 ஜனவரி 1 முதல் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படையை 50 சதவீதமாக உயர்த்தி வழங்கிட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசு பணியாளர்களுக்கும் தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் 46 சதவீதமாக உள்ள அகவிலை பணியை நாலு சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 2024 ஜனவரி 1 முதல் உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டுள்ளார் இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவார்கள் இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய் 25 87 . 91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனினும் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன் கருதி இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும் .. இந்த அகவிலைப்படி உயர்வாள் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். மேலும் எதிர்வரும் காலங்களிலும் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழ்நாடு அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வை செயல்படுத்திடும்' என்று மாநில அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Tags : முதலமைச்சா்.மு.க. ஸ்டாலின்

Share via