மிதிலி புயல் : தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

by Staff / 18-11-2023 01:22:07pm
மிதிலி புயல் : தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் கடந்த செவ்வாய்க்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாறி உள்ளது. இதற்கு மிதிலி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழக துறைமுகங்களில் பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எண்ணூர் மற்றும் காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகள் பாதுகாக்க மீன்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

 

Tags :

Share via

More stories