ஏப்ரல் மாத ராசிபலன்கள் -2023

by Admin / 31-03-2023 09:50:04am
ஏப்ரல் மாத ராசிபலன்கள் -2023

மேஷம் ராசி- ஏப்ரல் மாத ராசிபலன்கள், 2023

சூரியன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் குணநலன்களில் மாற்றங்கள் ஏற்படும். தாய்மாமன் வழி உறவினர்களிடம் கோபமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செல்லப்பிராணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். செவ்வாய் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் விடாப்பிடியாக செயல்பட்டு விரும்பியதை நிறைவேற்றி கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் அதிகரிக்கும். புதன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகளை சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் ராசியில் இருப்பதினால் எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். மனதில் இனம்புரியாத தயக்க உணர்வு ஏற்படும். சுக்ரன் ராசியில் இருப்பதினால் சிற்றின்பம் தொடர்பான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த பதவி உயர்வு சாதகமாகும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் குடும்பத்தில் இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் குறையும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குரு போக ஸ்தானத்தில் இருப்பதினால் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். கல்வி சார்ந்த விரயங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய தொழில் நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி லாப ஸ்தானத்தில் இருப்பதினால் குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் அஞ்ஞான சிந்தனைகளும், எண்ணங்களும் அதிகரிக்கும். ராகு ராசியிலே இருப்பதினால் திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். வித்தியாசமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கேது களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் சில நெருக்கடியான சூழ்நிலைகளால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.


 

 

 

 

 

ரிஷபம் ராசி- ஏப்ரல் மாத ராசிபலன்கள், 2023.

 

சூரியன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான சூழ்நிலைகள் அமையும். செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பணி நிமிர்த்தமான ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் சிந்தனையின் போக்கில் சற்று கவனம் வேண்டும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் இழுபறியான தனவரவுகளின் மூலம் மேன்மை ஏற்படும். நிதானமான பேச்சுக்களால் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாலின மக்களால் சில விரயங்கள் உண்டாகும். விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் பகைமையை குறைத்து கொள்வீர்கள். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் ராசியில் இருப்பதினால் செய்கின்ற பணிகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். குரு லாப ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். செய்ய தவறிய சில செயல்களை செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் பயணங்கள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உலகியல் வாழ்க்கையை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது நல்லது. ராகு போக ஸ்தானத்தில் இருப்பதினால் நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மாறுபட்ட அனுபவங்களால் மனதில் மாற்றங்கள் ஏற்படும். கேது சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். 

 

 

மிதுனம் ராசி -ஏப்ரல் மாத ராசிபலன்கள். 2023.

சூரியன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் புரிதல் உண்டாகும். மின்சாரம் சார்ந்த துறைகளில் கவனம் வேண்டும். புதிய நுட்பமான விஷயங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செவ்வாய் ராசியில் இருப்பதினால் ஆடம்பர சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. சமூப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தாமதம் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் தோற்றப்பொலிவில் மாற்றங்கள் ஏற்படும். முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் மாற்றங்கள் ஏற்படும். சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் போக ஸ்தானத்தில் இருப்பதினால் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ரகசியமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குரு தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் விதண்டாவாத சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதில் சேமிப்பது பற்றிய சிந்தனைகள் மேம்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். சீருடை சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான சூழல் அமையும். ராகு லாப ஸ்தானத்தில் இருப்பதினால் மனை சார்ந்த தொழிலில் முதலீடுகள் மேம்படும். வித்தியாசமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கேது புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் ஆன்மிகம் தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும்.

 

 

 

 

 

 

 

கடகம் ராசி -ஏப்ரல் மாத ராசிபலன்கள், 2023..

 

சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். செவ்வாய் போக ஸ்தானத்தில் இருப்பதினால் சிந்தனைகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். பூர்வீக சொத்துக்களில் அலைச்சல்கள் உண்டாகும். புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய முயற்சிகளில் மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபார பணிகளில் புதிய முதலீடுகள் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் தனவரவுகள் மேம்படும். மூத்த உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குரு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நீண்ட காலமாக தடைபட்ட தனம் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் வாழ்க்கைத் துணைவரிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ராகு தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் அரசு தொடர்பான காரியங்களில் சிந்தித்து செயல்படவும். மருத்துவம் சார்ந்த துறைகளில் புதிய ஆலோசனைகள் கிடைக்கும். கேது சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உயர்நிலை கல்வியில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும்.

 

 

 

சிம்மம் ராசி-  ஏப்ரல்மாத ராசிபலன்கள் ,2023.

 

சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். நெருக்கமானவர்களிடத்தில் மன வருத்தங்கள் ஏற்படலாம். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மாற்றமான சிந்தனைகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் சம்பந்தமான விஷயங்களில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது. பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் ஆராய்ச்சி சம்பந்தமான பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை பெறுவீர்கள். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மேன்மை உண்டாகும். வாகனம் தொடர்பான பழுதுகளை சீர் செய்வீர்கள். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் எண்ணிய காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை மேம்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகளும், புதிய நபர்களின் அறிமுகமும் கிடைக்கும். ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் புத்துணர்ச்சி ஏற்படும். கேது சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். வியாபாரத்தில் மந்தமான சூழ்நிலைகள் ஏற்படும். 

 

 

கன்னி ராசி- ஏப்ரல்மாத ராசிபலன்கள், 2023.

 

சூரியன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் படிப்படியாக குறையும். எதிலும் துரிதத்துடன் செயல்படுவீர்கள். செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் விலகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் வாக்கு சாதுரியத்தின் மூலம் தடைபட்ட சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். காணாமற்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ராகு அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். கேது குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையும் உண்டாகும்.

 

 

 

 

 

 

 

துலாம் ராசி-ஏப்ரல் மாத ராசிபலன்கள், 2023

 

சூரியன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் உயர் அதிகாரிகளின் மூலம் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சமூக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் மனதிற்கு நெருக்கமானவர்களுடன் சிறு தூர பயணங்களை மேற்கொள்வீர்கள். மனை மற்றும் வீடு நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் இஷ்ட தெய்வங்களை வழிபடுவதன் மூலம் மனதில் புதிய நம்பிக்கை ஏற்படும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் எதிர்காலம் சார்ந்த சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகள் நீங்கும். சனி சுக ஸ்தானத்தில் இருப்பதினால் ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் புராணங்களின் மீது ஆர்வம் ஏற்படும். புதிய கலை சார்ந்த முயற்சிகள் மேம்படும். ராகு களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். கேது ராசியில் இருப்பதினால் உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் ஆதரவை பெறுவீர்கள். 

 

 

 

 

 

 

 

 

விருச்சிகம் ராசி -ஏப்ரல்  மாத ராசிபலன்கள், 2023.

 

சூரியன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் எந்தவொரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். புதுவிதமான கனவு உண்டாகும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பம் ஏற்பட்டாலும் அதை நிவர்த்தி செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். புதிய நபர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். உங்களின் தனிப்பட்ட ஆசைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபார பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். புத்திசாலிதமான செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். அலுவலக பணிகளில் மதிப்பு மேம்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உடல் தோற்றப்பொலிவு மேம்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும். ராகு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் உலகியல் வாழ்க்கையை பற்றிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் பழகும்போது கவனம் வேண்டும். கேது போக ஸ்தானத்தில் இருப்பதினால் வெளியில் உணவு உண்பதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. மனதில் உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். 

 

 

தனுசு ராசி-ஏப்ரல் மாத ராசி பலன்கள், 2023.

சூரியன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். வெளிநாடுகளில் எதிர்பார்த்த குடியுரிமைகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். செவ்வாய் களத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் உறவினர்களின் வழியில் சில உதவிகள் கிடைக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் வரவுகள் மேம்படும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலகி இருந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் நீண்ட நாட்களாக மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் நபர்களின் தன்மையை அறிந்து உதவுவது மேன்மையை ஏற்படுத்தும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. குரு சுக ஸ்தானத்தில் இருப்பதினால் விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை ஏற்படுத்தும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் ஈடேறும். ராகு புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான சூழ்நிலைகள் அமையும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கேது லாப ஸ்தானத்தில் இருப்பதினால் பெரிய மனிதர்களின் நட்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். 

 

 

மகரம் ராசி- ஏப்ரல் மாத ராசிபலன்கள், 2023.

 

சூரியன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் உங்கள் மீதான அவப்பெயர்கள் நீங்கும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் மனதில் தெளிவு பிறக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். செவ்வாய் சத்ரு ஸ்தானத்தில் இருப்பதினால் உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஈர்ப்பு அதிகரிக்கும். புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் எந்தவொரு காரியத்திலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றங்கள் உண்டாகும். சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் வாகனத்தை சீர் செய்வீர்கள். மனை தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் குழந்தைகளால் ஏற்பட்ட கவலைகள் நீங்கும். எதையும் சமாளிக்கக்கூடிய தன்னம்பிக்கை அதிகரிக்கும். குரு சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். கடினமான செயல்களையும் எளிதில் செய்து முடிப்பீர்கள். சனி ராசியில் இருப்பதினால் செயல்பாடுகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். புதுவிதமான தோற்றப்பொலிவுடன் காணப்படுவீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ராகு சுக ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கால்நடை தொடர்பான பணிகளில் விவேகம் வேண்டும். கேது தொழில் ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபார ரீதியாக வெளிவட்டாரத்தில் நட்பு அதிகரிக்கும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். 

 

 

கும்பம் ராசி- ஏப்ரல் மாத ராசி பலன்கள், 2023.

 

சூரியன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தவறிப்போன சில பொருட்களை பற்றிய விவரங்கள் கிடைக்கும். சுபகாரியங்களில் அலைச்சல்கள் உண்டாகும். செவ்வாய் புத்திர ஸ்தானத்தில் இருப்பதினால் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளை பெறுவீர்கள். புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் மற்றவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். முயற்சிகளில் இருந்துவந்த மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தூர பயணங்களின் மூலம் மாற்றங்கள் உண்டாகும். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் விவசாயம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்ப நபர்களை பற்றிய புரிதல் ஏற்படும். குரு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் சாதுரியமான கருத்துக்களின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். சனி போக ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மனதில் மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி ராசியில் இருப்பதினால் மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ராகு சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் வாகனம் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கேது பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய துறைகள் சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.

 

 

மீனம் ராசி மாத ராசி பலன்கள், 2023..

 

சூரியன் ராசியில் இருப்பதினால் மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். வித்தியாசமான முயற்சிகளின் மூலம் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். செவ்வாய் சுக ஸ்தானத்தில் இருப்பதினால் இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவு பெறும். வாக்கு சாதுரியத்தின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். புதன் ராசியில் இருப்பதினால் உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பங்குனி 15ஆம் தேதி முதல் புதன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் வாகன பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். சுக்ரன் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் மனதில் இருந்துவந்த குழப்பம் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவேகத்துடன் செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். பங்குனி 24ஆம் தேதி முதல் சுக்ரன் சகோதர ஸ்தானத்தில் இருப்பதினால் எதிர்ப்புகளால் புதிய அனுபவம் கிடைக்கும். மறைமுகமான வரவுகள் மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். குரு ராசியில் இருப்பதினால் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கால்நடை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதினால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் உள்ள நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பங்குனி 15ஆம் தேதி முதல் சனி போக ஸ்தானத்தில் இருப்பதினால் தடையாக இருந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி மனம் மகிழ்வீர்கள். ராகு குடும்ப ஸ்தானத்தில் இருப்பதினால் ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கேது அஷ்டம ஸ்தானத்தில் இருப்பதினால் புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகளை பெற்று செயல்படவும். விருப்பமில்லாத சில செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

 

 

Tags :

Share via