மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி

by Admin / 29-09-2021 10:03:50am
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி

'கர்ணன்' படத்தை அடுத்து, பா.இரஞ்சித் தயாரிப்பில் துருவ் விக்ரமை வைத்து கபடி கதையொன்றை இயக்க தயாராகிக் கொண்டிருந்தார் இயக்குநர் மாரி செல்வராஜ். ஆனால், இடையில் உதயநிதி ஸ்டாலின் தனக்கொரு படம் செய்து தரச் சொல்லி கேட்க, அந்தப் படத்துக்கான பணிகள் ஆரம்பமாகின.

உள்ளாட்சி தேர்தல் முடிந்ததும் நவம்பர், டிசம்பரில் இந்தப் படம் தொடங்கவிருக்கிறது. 40 நாள்கள் ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கத் திட்டமிட்டிருக்கின்றனர். இனி முழுக்க முழுக்க அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த இருப்பதால் சினிமாவில் உதயநிதி நடிக்கும் கடைசி படம் இதுதான் என்கிறார்கள். அதனால் இந்தப் படம் மிகச்சிறப்பானதாக வெளிவர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் உதயநிதி.

அதனால்தான் ஏ.ஆர்.ரஹ்மானை இசையமைக்கச் சொல்லியிருக்கிறார்கள்.இதுதவிர படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் எனத் தகவல்கள் வந்தன. அதில் ஒருவர் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில். இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

 

Tags :

Share via