3,82,475 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 64,482 லிட்டர்கள்ளச்சாராயம் பறிமுதல் -வேலூர் எஸ்.பி மணிவண்ணன் அறிக்கை.

வேலூர் மாவட்டத்தில் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 3,82,475 லிட்டர் கள்ளச்சாராய ஊரல் மற்றும் 64,482 லிட்டர்கள்ளச்சாராய ம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளதாகவும் 52 குண்டாஸ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்சுவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 3,82,475 லிட்டர் கள்ளச்சாராய ஊரல்கள், சுமார் 64,482 லிட்டர் கள்ளச்சாராயம், 43,164 மது பாட்டில்கள், கள்ளச்சாராய ஊரலுக்கு பயன்படுத்தும் வெல்லம் 12,100 கிலோ, வெள்ளை சர்க்கரை 915 கிலோ, பட்டை சுமார் 1,200 கிலோ மற்றும் கள் 128 லிட்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு உள்ளன கடத்தலுக்கு பயன்படுத்திய 169 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கள்ளச்சாராய வழக்குகள் 5,656 பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது 52 BL ACT (Goondas) போடப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Tags : வேலூர் எஸ்.பி மணிவண்ணன் அறிக்கை.