இனி பிஎப் வட்டி வருவாய்க்கும் வரி.. மாத சம்பளதாரர்கள் அதிர்ச்சி

by Editor / 07-09-2021 04:07:13pm
இனி பிஎப் வட்டி வருவாய்க்கும் வரி.. மாத சம்பளதாரர்கள் அதிர்ச்சி

பிஎப் கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வட்டி வருவாய் பெறுபவர்கள், அதற்கு வரி செலுத்த வேண்டும் என்று 2021-2022 பட்ஜெட் கூட்டத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாரமன் அறிவித்து இருந்தார்.

அதைச் செயல்படுத்தும் விதமாக வரி செலுத்த வேண்டிய பிஎப் கணக்குகள் மற்றும் வரி செலுத்தத் தேவையில்லாத பிஎப் கணக்குகள் என இரண்டாகப் பிரிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

வரி செலுத்தும் போது ஏற்படும் குழப்பத்தை தவிர்க இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக மத்திய நேரடி வரி வாரியம் தெரிவித்துள்ளது.

பிஎப் கணக்கு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதிய திட்டமாக அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் தங்களது வருமான வரியைக் குறைத்து அதிகம் சேமிக்க விரும்பினால் பிஎப் திட்டத்தில் தங்களது சம்பளத்திலிருந்து கூடுதல் பணத்தை பிஎப் கணக்கில் செலுத்தவும் அனுமதி உள்ளது.

இப்படி பலர் ஒரு சமூக பாதுகாப்பு திட்டத்தை வரி சேமிக்கும் ஒரு திட்டமாகப் பயன்படுத்துவதைத் தடுக்க, 2.5 லட்சம் மேல் வட்டி வருவாய் வரும் பிஎப் கணக்குகள் வரி செலுத்தும் முறையை நடப்பு நிதியாண்டு முதல் அமலுக்குக் கொண்டு வந்துள்ளது ஒன்றிய அரசு.

இதனால் குறைந்த அல்லது நடுத்தர சம்பளம் பெருபவர்ளுக்கு பாதிப்பு இருக்காது. அதிக சம்பளம் பெற்று அதற்கான வரியைச் செலுத்துவதைத் தவிர்த்து பிஎப் கணக்குகளைப் பயன்படுத்துபவர்களுக்குத் தான் பதிப்பு இருக்கும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கூறுகின்றார்.

 

Tags :

Share via