37 அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு

நாட்டில் 37 அத்தியாவசிய மருந்துகளின் சில்லறை விலையை குறைத்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மத்திய ரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகமும் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதய நோய், நீரிழிவு நோய் மருந்துகளின் விலைகள் குறையும் என தகவல் வெளியாகியுள்ளது. பாராசிட்டமால், அடோர்வாஸ்டாடின், அமோக்ஸிசிலின் ஆகியவற்றின் விலைகள் குறைகிறது. இதன்மூலம் சாமனிய மக்களின் சுமை குறையும்.
Tags :