மகளிர் சுயஉதவிகுழு தலைவியை இரவு வரை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்.

by Staff / 15-12-2022 03:21:10pm
மகளிர் சுயஉதவிகுழு தலைவியை இரவு வரை சிறைபிடித்த வங்கி ஊழியர்கள்.

குலசேகரம் அருகே செருப்பாலூர் பகுதியில் செயல்பட்டுவரும் தனியார் வங்கியில் ஆற்றூர் பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவி குழு பெண்கள் பலரும் கடன் பெற்றுள்ளனர். அவர்கள் இந்த கடனை வார தவணையாக கட்டி வந்தனர். ரூ. 29, 500 கட்டிய நிலையில் கொரோனா காலங்களில் சரியான படி கட்ட முடிய வில்லை என கூறப்படுகிறது. அதன்பிறகு வட்டியுடன் சேர்த்து வாரந் தோறும் சரியான முறையில் கடனை கட்டி வந்தார்கள். நேற்று காலை கடன் தொகையை கட்ட மகளிர் சுய உதவி குழு தலைவி ஒருவர் வங்கிக்கு வந்தார். அப்போது குறிப்பிட்ட தொகைக்கு குறைவாக பணம் இருந்ததால் ஒருநாள் அவகாசம் தருமாறு வங்கி நிர்வாகத்தினரிடம் கேட்டுள்ளார். ஆனால் வங்கி ஊழியர்கள் அவகாசம் தரமுடியாது. உடனே பணம் கட்ட வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. மேலும் அவர்கள், மகளிர் சுய உதவிக்குழு தலைவியை வெகு நேரம் வங்கியில் காக்க வைத்துள்ளனர். காலை 10 மணிக்கு வங்கிக்கு வந்த அவரை இரவு 9. 30 மணிவரை சிறைபிடித்து வைத்துள்ளனர். மேலும் அவரின் செல்போனையும் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த தகவல் அந்த பகுதி யில் உள்ள பொது மக்களுக்கு தெரிய வரவே, அவர்கள் வங்கிக்கு வந்து ஊழியர்களிடம் கேட்டனர். இது தொடர்பாக அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு குலசேக ரம் பேரூராட்சி துணை தலைவர் ஜோஸ் எட்வர்ட் தலைமையில் பொதுமக்கள் வங்கி ஊழியர்களிடம் பேசி, இரவு 10 மணிக்கு சிறைபிடிக்கப்பட்ட மகளிர் சுயஉதவிகுழு தலைவியை மீட்டனர். பின்னர் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்த னர். இந்த சம்பவம் குலசே கரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனி யார் வங்கி ஊழி யர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Tags :

Share via